எமது ஹைபொரஸ்ட் இல : 03 ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயமானது 1956 ஆம் ஆண்டளவில் நிர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்தத எமது ஆலயம் மழைக்காலங்களில் ஒழுகுவதும் நீர் கசிவதுமாக காணப்பட்டது. அத்துடன் ஆலய பரிவார மூர்த்திகளுக்கு அழகான சன்னிதிகள் அமையப்பெறாமலும் இருந்தது. 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆலயத்தினை புதுப்பொழிவுடன் நிர்மானிக்க பொது மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு ஆலய நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விஷ்ணு பெருமானின் திருவருளால் வேகமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது
ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூல மூர்த்திகள் ஆலயத்தின் அருகே உள்ள கொட்டகைக்கு நகர்த்தப்பட்டது.
ஆலயம் உடைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு முழுமையாக உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
வேலைக்கான பாஸ்மார்கள் தெரிவு செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ஆலயத்தின் புதிய கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கட்டுமானத்திற்கான பொருட்கள் நன்கொடையாக பெறப்பட்டது.
மண் நிரப்பப்பட்டு தரையானது உறுதியாக்கப்பட்டது.
அடித்தள கட்டுமானதிற்கான அடித்தலம் போடப்பட்டது.
சுவர் கட்டுவதற்கான செங்கல்கள் நன்கொடையாக பெறப்பட்டு சுவர் கட்டும் வேலைகள் பூரணப்படுத்தப்பட்டது.
காளிக்கொவில் வேலைகள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டது.
மூலஸ்தான அடிக்கட்டுமானம் பூரணப்படுத்தப்பட்டது.
ஸ்லாப் , தூண்களுக்கான செட்லிங்க் அடிக்கப்பட்டு ஸ்லாப் வேலை பூரணப்படுத்தப்பட்டது.
மூங்கில்கள் வெட்டப்பட்டு கொண்டுவரப்பட்டது.
கம்ம்பிகள் பிண்ணப்பட்டு பூரணப்படுதப்பட்டது.
தரைக்கு முழுமையாக காங்கிரீட் இடப்பட்டது.
இராஜகோபுர அடிகட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது.
இராஜகோபுர தூண்கள் முழுமையாக எழுப்பப்பட்டுகட்டுமானம் பூரணப்படுத்தப்பட்டது.
வயரிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பட்டைகள் போடப்பட்டது.
நீர் வழிந்தோடும் கான்கள், வெளி பேமன்ட்கள் போடப்பட்டது.
மூலஸ்தான கோபுரம் கட்டப்பட்டது.
சிற்பியால் கொடங்கை வேலைகள் பூரணப்படுத்தப்பட்டது.
சுவர்கள் அனைத்தும் கப்ளர் வேலை பூரனப்படுதப்பட்டது.
வயரிங் வேலைகள் பூரணப்படுதப்பட்டது.
ஜன்னல்கள் போடப்பட்டு சல்லடை தட்டு அடிக்கப்பட்டது.
பரிவார மூர்த்திகளுக்கான பீடங்களின் கட்டுமான வேலைகள் பூரணப்படுத்தப்பட்டது.
நீர் விநியோக குழாய்கள் பொருத்தப்பட்டது.
பொட்டி பூசல் வேலை பூரணப்படுத்தப்பட்டது.
பூமிக்கு டேரோசா போடும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அலங்கார கதவுகள் அமைக்கப்பட்டு கொண்டுவருவதற்கான வேலைகள் நடை பெற்று வருகின்றது.