எமது ஹைபொரஸ்ட் இல : 03 ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயமானது 1956 ஆம் ஆண்டளவில் நிர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்தத எமது ஆலயம் மழைக்காலங்களில் ஒழுகுவதும் நீர் கசிவதுமாக காணப்பட்டது. அத்துடன் ஆலய பரிவார மூர்த்திகளுக்கு அழகான சன்னிதிகள் அமையப்பெறாமலும் இருந்தது. 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆலயத்தினை புதுப்பொழிவுடன் நிர்மானிக்க பொது மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு ஆலய நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விஷ்ணு பெருமானின் திருவருளால் வேகமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது